Siva Siva
Siva Siva
  • 852
  • 2 340 749
7.5 - Part-1 - நெய்யும் பாலும் - neyyum pAlum - (Thevaram class)
List of other padhigam classes: thevaramclass.blogspot.com/p/index-01.html
Part-1:
Part-2:
சுந்தரர் தேவாரம் - 7.5 - நெய்யும் பாலும் - திருவோணகாந்தன்தளி - (பண் - இந்தளம்)
sundarar tēvāram - 7.5 - neyyum pālum - tiruvōṇagāndantaḷi - (paṇ - indaḷam)
Odhuvar - Dharmapuram Swaminathan: ua-cam.com/video/KdpXb3PXBhE/v-deo.html
Sambandam Gurukkal: ua-cam.com/video/s_IXNCT-7ZU/v-deo.html
G.P. Nallasivam: ua-cam.com/video/TzdBCOhKDC4/v-deo.html
பதிகப் பொருள் விளக்கம் - Detailed meaning / explanation of padhigam verses.
இப்பதிகப் பாடல்களைக் கீழ்க்காணும் தளத்தில் காணலாம்:
Blog post link: thevaramclass.blogspot.com/2024/08/75-neyyum-palum.html
Verses of this padhigam are available (in several languages) in the above URL.
V. Subramanian
#thevaram #thevaramclass #தேவாரம் #தேவாரவகுப்பு #sundarar #சுந்தரர்
--------------
Word separated:
Sundarar comes to Onakandhan-thaLi and sings a "nindhAsthuthi" padhigam seeking gold
# 3345 - பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 191
ஓணகாந்தன்-தளி மேவும் ஒருவர்-தம்மை, உரிமையுடன்
பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமைத்-திறம் பேசிக்,
காணமோடு பொன் வேண்டி, "நெய்யும் பாலும்" கலை விளங்கும்
யாணர்ப் பதிகம் எடுத்து ஏத்தி, எண்-இல் நிதி பெற்று இனிது-இருந்தார்.
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.5 - திருவோணகாந்தன்தளி - (பண் - இந்தளம்)
(தான தானா - தான தானா x 2 - Rhythm)
பாடல் எண் : 1
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு
.. நித்தல் பூசனை செய்யலுற்றார் *
கையில் ஒன்றும் காணம் இல்லை,
.. கழலடி தொழுது உய்யின்-அல்லால்;
ஐவர் கொண்டு இங்கு ஆட்ட வாடி
.. ஆழ்-குழிப்பட்டு அழுந்துவேனுக்கு
உய்யுமாறு ஒன்று அருளிச் செய்யீர்;
.. ஓணகாந்தன்-தளி உளீரே.
* (Probably it should have been செய்யலுற்றால் )
பாடல் எண் : 2
திங்கள் தங்கு சடையின்மேல் ஓர்
.. திரைகள் வந்து புரள வீசும்
கங்கையாளேல் வாய் திறவாள்;
.. கணபதியேல் வயிறுதாரி;
அங்கை வேலோன் குமரன் பிள்ளை;
.. தேவியார் கோற்றட்டி * ஆளார்;
உங்களுக்கு ஆட்செய்ய மாட்டோம்,
.. ஓணகாந்தன்-தளி உளீரே.
(* கோற்றட்டி = கோனைத் தட்டி)
பாடல் எண் : 3
பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
.. பேணி உம் கழல் ஏத்துவார்கள்
மற்று-ஓர் பற்று இலர் என்று இரங்கி
.. மதி உடையவர் செய்கை செய்யீர்;
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
.. ஆவற்-காலத்து, அடிகேள், உம்மை
ஒற்றி வைத்து இங்கு உண்ணல் ஆமோ?
.. ஓணகாந்தன்-தளி உளீரே.
பாடல் எண் : 4
வல்லதெல்லாம் சொல்லி உம்மை
.. வாழ்த்தினாலும் வாய் திறந்து ஒன்று
இல்லை என்னீர், உண்டும் என்னீர்;
.. எம்மை ஆள்வான் இருப்பது என் நீர்;
பல்லை உக்க படுதலையில்
.. பகல்-எலாம் போய்ப் பலி-திரிந்து இங்கு
ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்;
.. ஓணகாந்தன்-தளி உளீரே.
பாடல் எண் : 5
கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
.. கொண்ட பாணி குறைபடாமே
ஆடிப் பாடி அழுது நெக்கு அங்கு
.. அன்புடையவர்க்கு இன்பம் ஓரீர்;
தேடித் தேடித் திரிந்து எய்த்தாலும்
.. சித்தம் என்பால் வைக்க மாட்டீர்;
ஓடிப் போகீர், பற்றும் தாரீர்;
.. ஓணகாந்தன்-தளி உளீரே.
=====
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Sundarar comes to Onakandhan-thaLi and sings a "nindhAsthuthi" padhigam seeking gold
# 3345 - periyapurāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 191
ōṇagāndan-taḷi mēvum oruvar-tammai, urimaiyuḍan
pēṇi amainda tōḻamaiyāl perugum aḍimait-tiṟam pēsik,
kāṇamōḍu pon vēṇḍi, "neyyum pālum" kalai viḷaṅgum
yāṇarp padigam eḍuttu ētti, eṇ-il nidi peṭru inidu-irundār.
sundarar tēvāram - padigam 7.5 - tiruvōṇagāndandaḷi - (paṇ - indaḷam)
(tāna tānā - tāna tānā x 2 - Rhythm)
pāḍal eṇ : 1
neyyum pālum tayirum koṇḍu
.. nittal pūsanai seyyaluṭrār *
kaiyil oṇḍrum kāṇam illai,
.. kaḻalaḍi toḻudu uyyin-allāl;
aivar koṇḍu iṅgu āṭṭa vāḍi
.. āḻ-kuḻippaṭṭu aḻunduvēnukku
uyyumāṟu oṇḍru aruḷic ceyyīr;
.. ōṇagāndan-taḷi uḷīrē.
* (Probably it should have been seyyaluṭrāl )
pāḍal eṇ : 2
tiṅgaḷ taṅgu saḍaiyinmēl ōr
.. tiraigaḷ vandu puraḷa vīsum
gaṅgaiyāḷēl vāy tiṟavāḷ;
.. gaṇabadiyēl vayiṟudāri;
aṅgai vēlōn kumaran piḷḷai;
.. dēviyār kōṭraṭṭi * āḷār;
uṅgaḷukku āṭceyya māṭṭōm,
.. ōṇagāndan-taḷi uḷīrē.
(* kōṭraṭṭi = kōnait taṭṭi)
pāḍal eṇ : 3
peṭra pōḻdum peṟāda pōḻdum
.. pēṇi um kaḻal ēttuvārgaḷ
maṭru-ōr paṭru ilar eṇḍru iraṅgi
.. madi uḍaiyavar seygai seyyīr;
aṭra pōḻdum alanda pōḻdum
.. āvaṟ-kālattu, aḍigēḷ, ummai
oṭri vaittu iṅgu uṇṇal āmō?
.. ōṇagāndan-taḷi uḷīrē.
pāḍal eṇ : 4
valladellām solli ummai
.. vāḻttinālum vāy tiṟandu oṇḍru
illai ennīr, uṇḍum ennīr;
.. emmai āḷvān iruppadu en nīr;
pallai ukka paḍudalaiyil
.. pagal-elām pōyp pali-tirindu iṅgu
ollai vāḻkkai oḻiya māṭṭīr;
.. ōṇagāndan-taḷi uḷīrē.
pāḍal eṇ : 5
kūḍik kūḍit toṇḍar taṅgaḷ
.. koṇḍa pāṇi kuṟaibaḍāmē
āḍip pāḍi aḻudu nekku aṅgu
.. anbuḍaiyavarkku inbam ōrīr;
tēḍit tēḍit tirindu eyttālum
.. sittam enbāl vaikka māṭṭīr;
ōḍip pōgīr, paṭrum tārīr;
.. ōṇagāndan-taḷi uḷīrē.
=====
Переглядів: 63

Відео

thiruppugazh - viRalmAran aindhu - விறல்மாரன் ஐந்து - திருப்புகழ் - class
Переглядів 12514 днів тому
List of other thiruppugazh classes: thevaramclass.blogspot.com/p/index-01.html பதிகப் பொருள் விளக்கம் - Detailed meaning / explanation of padhigam verses. திருப்புகழ் - விறல்மாரன் ஐந்து - 1293 - (திருச்செந்தூர்) tiruppugaḻ - viṟalmāran aindu - 1293 - (tiruccendūr) Bhavya Hari: ua-cam.com/video/DlQCsGHxi0A/v-deo.html Meera Ramesh: ua-cam.com/video/pDcCuzkeY1o/v-deo.html இப்பாடல்களைக் கீழ்க்காணும...
thiruppugazh - santhatham bandha - சந்ததம் பந்த - திருப்புகழ் - class
Переглядів 32714 днів тому
List of other thiruppugazh classes: thevaramclass.blogspot.com/p/index-01.html பதிகப் பொருள் விளக்கம் - Detailed meaning / explanation of padhigam verses. திருப்புகழ் - சந்ததம் பந்த - 609 - (திருப்பரங்குன்றம்) tiruppugaḻ - sandadam banda - 609 - (tirupparaṅguṇḍram) Bhavya Hari: ua-cam.com/video/nrDjzD7fxew/v-deo.html Dharmapuram Swaminathan: ua-cam.com/video/l2bg21Wntaw/v-deo.html A.S. Raghavan...
4.46 - ஓம்பினேன் கூட்டை - OmbinEn kUttai - (Thevaram class - Tamil)
Переглядів 22821 день тому
List of other padhigam classes: thevaramclass.blogspot.com/p/index-01.html Odhuvar: Dharmapuram Swaminathan - தர்மபுரம் சுவாமிநாதன்: ua-cam.com/video/kjnmXkEkJ48/v-deo.html Sathgurunathan (with intro talk): ua-cam.com/video/Tde9_7D43dM/v-deo.html Thiruthani Swaminathan: ua-cam.com/video/sJNM-pFgDsw/v-deo.html G.P. Nallasivam: ua-cam.com/video/oos3CBD7shc/v-deo.html திருநாவுக்கரசர் தேவாரம் - 4.4...
thiruppugazh - ARumugam ARumugam - திருப்புகழ் - ஆறுமுகம்‌ ஆறுமுகம்‌ - class
Переглядів 130Місяць тому
List of other thiruppugazh classes: thevaramclass.blogspot.com/p/index-01.html பதிகப் பொருள் விளக்கம் - Detailed meaning / explanation of padhigam verses. திருப்புகழ் - ஆறுமுகம்‌ ஆறுமுகம்‌ - 142 - (பழநி) tiruppugaḻ - āṟumugam āṟumugam - 142 - (paḻani) Bhavya Hari: ua-cam.com/video/450NoQf97Zs/v-deo.html A.S Raghavan : ua-cam.com/video/PM4s-fUJ3UI/v-deo.html Sambandam Gurukkal: ua-cam.com/video/...
thiruppugazh - kAmiyaththu azhundhi - திருப்புகழ் - காமியத்து அழுந்தி - class
Переглядів 191Місяць тому
List of other thiruppugazh classes: thevaramclass.blogspot.com/p/index-01.html பதிகப் பொருள் விளக்கம் - Detailed meaning / explanation of padhigam verses. திருப்புகழ் - காமியத்து அழுந்தி - 467 - (திருவேரகம் - சுவாமிமலை) tiruppugaḻ - kāmiyattu aḻundi - 467 - (tiruvēragam - svāmimalai) Bhavya Hari: ua-cam.com/video/_alfMQXSkUI/v-deo.html Sambandam Gurukkal: ua-cam.com/video/V6AnUp1ESBU/v-deo.html...
3.71 - Part-3 - கோழைமிடறாக - kOzhai midaRAga - (Thevaram class - Tamil)
Переглядів 54Місяць тому
For the list of other padhigam classes: thevaramclass.blogspot.com/p/index-01.html Part-1: ua-cam.com/video/wrcTBj4ogaM/v-deo.html Part-2: Part-3: சம்பந்தர் தேவாரம் - 3.71 - கோழைமிடறாக - திருவைகாவூர் - (பண் - சாதாரி) sambandar tēvāram - 3.71 - kōḻaimiḍaṟāga - tiruvaigāvūr - (paṇ - sādāri) Odhuvar - Dharmapuram Swaminathan - தர்மபுரம் சுவாமிநாதன்: ua-cam.com/video/zjCcm6msWAA/v-deo.html பதிகப் ப...
3.71 - Part-2 - கோழைமிடறாக - kOzhai midaRAga - (Thevaram class - Tamil)
Переглядів 65Місяць тому
For list of other padhigam classes: thevaramclass.blogspot.com/p/index-01.html Part-1: ua-cam.com/video/wrcTBj4ogaM/v-deo.html Part-2: Part-3: சம்பந்தர் தேவாரம் - 3.71 - கோழைமிடறாக - திருவைகாவூர் - (பண் - சாதாரி) sambandar tēvāram - 3.71 - kōḻaimiḍaṟāga - tiruvaigāvūr - (paṇ - sādāri) Odhuvar - Dharmapuram Swaminathan - தர்மபுரம் சுவாமிநாதன்: ua-cam.com/video/zjCcm6msWAA/v-deo.html பதிகப் பொருள...
3.71 - Part-1 - கோழைமிடறாக - kOzhai midaRAga - (Thevaram class - Tamil)
Переглядів 102Місяць тому
List of other padhigam classes: thevaramclass.blogspot.com/p/index-01.html Part-1: Part-2: சம்பந்தர் தேவாரம் - 3.71 - கோழைமிடறாக - திருவைகாவூர் - (பண் - சாதாரி) sambandar tēvāram - 3.71 - kōḻaimiḍaṟāga - tiruvaigāvūr - (paṇ - sādāri) Odhuvar - Dharmapuram Swaminathan - தர்மபுரம் சுவாமிநாதன்: ua-cam.com/video/zjCcm6msWAA/v-deo.html பதிகப் பொருள் விளக்கம் - Detailed meaning / explanation of padhi...
3.24 - Part-2 - மண்ணில் நல்ல வண்ணம் - maNNil nalla vaNNam - (Thevaram class - Tamil)
Переглядів 2262 місяці тому
List of other padhigam classes: thevaramclass.blogspot.com/p/index-01.html Part-1: ua-cam.com/video/A6s45kE4Tp4/v-deo.html Part-2: ua-cam.com/video/9qQuqqBkVLU/v-deo.html சம்பந்தர் தேவாரம் - 3.24 - மண்ணில் நல்ல வண்ணம் - கழுமலம் - (பண் - கொல்லி) sambandar tēvāram - 3.24 - maṇṇil nalla vaṇṇam - kaḻumalam - (paṇ - kolli) Odhuvar - Dharmapuram Swaminathan - தர்மபுரம் சுவாமிநாதன்: ua-cam.com/video/a...
3.24 - Part-1 - மண்ணில் நல்ல வண்ணம் - maNNil nalla vaNNam - (Thevaram class - Tamil)
Переглядів 1992 місяці тому
List of other padhigam classes: thevaramclass.blogspot.com/p/index-01.html Part-1: ua-cam.com/video/A6s45kE4Tp4/v-deo.html Part-2: ua-cam.com/video/9qQuqqBkVLU/v-deo.html சம்பந்தர் தேவாரம் - 3.24 - மண்ணில் நல்ல வண்ணம் - கழுமலம் - (பண் - கொல்லி) sambandar tēvāram - 3.24 - maṇṇil nalla vaṇṇam - kaḻumalam - (paṇ - kolli) Odhuvar - Dharmapuram Swaminathan - தர்மபுரம் சுவாமிநாதன்: ua-cam.com/video/a...
1.12 - Part-2 - மத்தாவரை நிறுவி - maththAvarai niRuvi - Thevaram class
Переглядів 762 місяці тому
List of other padhigam classes: thevaramclass.blogspot.com/p/index-01.html Part-1: ua-cam.com/video/3K8WNj_BeS8/v-deo.html Part-2: ua-cam.com/video/qusFGFH_Po4/v-deo.html சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.12 - மத்தாவரை நிறுவிக்கடல் - (திருமுதுகுன்றம்) (விருத்தாசலம்) sambandar thevaram - padhigam 1.12 - maththA varai niRuvik kadal - (Vriddachalam) பதிகப் பொருள் விளக்கம் - Detailed meaning / explanati...
1.12 - Part-1 - மத்தாவரை நிறுவி - maththAvarai niRuvi - Thevaram class
Переглядів 902 місяці тому
List of other padhigam classes: thevaramclass.blogspot.com/p/index-01.html Part-1: ua-cam.com/video/3K8WNj_BeS8/v-deo.html Part-2: ua-cam.com/video/qusFGFH_Po4/v-deo.html சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.12 - மத்தாவரை நிறுவிக்கடல் - (திருமுதுகுன்றம்) (விருத்தாசலம்) sambandar thevaram - padhigam 1.12 - maththA varai niRuvik kadal - (Vriddachalam) பதிகப் பொருள் விளக்கம் - Detailed meaning / explanati...
3.32 - Part-2 - வன்னியும் மத்தமும் - vanniyum maththamum - (தேவார வகுப்பு)
Переглядів 1103 місяці тому
List of other padhigam classes: thevaramclass.blogspot.com/p/index-01.html Part-1: ua-cam.com/video/nGURV8wuQJ0/v-deo.html Part-2: ua-cam.com/video/2mFgAtQJ6zg/v-deo.html சம்பந்தர் தேவாரம் - 3.32 - வன்னியும் மத்தமும் - திருவேடகம் - (பண் - கொல்லி) sambandar tēvāram - 3.32 - vanniyum mattamum - tiruvēḍagam - (paṇ - kolli) Odhuvar - Dharmapuram Swaminathan - தர்மபுரம் சுவாமிநாதன்: ua-cam.com/video...
4.62 - வேதியா வேத கீதா - vEdhiyA vEdha geedhA - (தேவார வகுப்பு)
Переглядів 1423 місяці тому
List of other padhigam classes: thevaramclass.blogspot.com/p/index-01.html Odhuvar: தர்மபுரம் சுவாமிநாதன் - Dharmapuram Swaminathan: ?? கோ.ப. நல்லசிவம் - G.P. Nallasivam: ua-cam.com/video/9Ua09EHDdBc/v-deo.html M.S. Subbulakshmi (Song-1 only): ua-cam.com/video/3aKNBn76PZo/v-deo.html திருநாவுக்கரசர் தேவாரம் - 4.62 - திரு-ஆலவாய் (மதுரை) - (திருநேரிசை) tirunāvukkarasar tēvāram - 4.62 - tiru-ālavāy...
3.32 - Part-1 - வன்னியும் மத்தமும் - vanniyum maththamum - (தேவார வகுப்பு)
Переглядів 1603 місяці тому
3.32 - Part-1 - வன்னியும் மத்தமும் - vanniyum maththamum - (தேவார வகுப்பு)
11.5 - Part-2 - (க்ஷேத்திர) சேத்திர வெண்பா - Kshethra Venba - Thevaram class (Tamil)
Переглядів 844 місяці тому
11.5 - Part-2 - (க்ஷேத்திர) சேத்திர வெண்பா - Kshethra Venba - Thevaram class (Tamil)
11.5 - Part-1 - (க்ஷேத்திர) சேத்திர வெண்பா - Kshethra Venba - Thevaram class (Tamil)
Переглядів 1164 місяці тому
11.5 - Part-1 - (க்ஷேத்திர) சேத்திர வெண்பா - Kshethra Venba - Thevaram class (Tamil)
திருப்புகழ் - வாசித்துக் காணொணாதது - class - thiruppugazh - vAsiththuk kANoNAdhadhu
Переглядів 2004 місяці тому
திருப்புகழ் - வாசித்துக் காணொணாதது - class - thiruppugazh - vAsiththuk kANoNAdhadhu
திருப்புகழ் - காதி மோதி - class - thiruppugazh - kAdhi mOdhi
Переглядів 1494 місяці тому
திருப்புகழ் - காதி மோதி - class - thiruppugazh - kAdhi mOdhi
7.41 - Part-3 - முதுவாய் ஓரி - mudhuvAy Ori - Thevaram class (Tamil)
Переглядів 1464 місяці тому
7.41 - Part-3 - முதுவாய் ஓரி - mudhuvAy Ori - Thevaram class (Tamil)
வாரம் உழவாரம் தேவாரம் - Part-1c - திருநாவுக்கரசர் வாழ்வும் வாக்கும் - இசைப் பயணம் - Appar story
Переглядів 1804 місяці тому
வாரம் உழவாரம் தேவாரம் - Part-1c - திருநாவுக்கரசர் வாழ்வும் வாக்கும் - இசைப் பயணம் - Appar story
வாரம் உழவாரம் தேவாரம் - Part-1b - திருநாவுக்கரசர் வாழ்வும் வாக்கும் - இசைப் பயணம் - Appar story
Переглядів 1335 місяців тому
வாரம் உழவாரம் தேவாரம் - Part-1b - திருநாவுக்கரசர் வாழ்வும் வாக்கும் - இசைப் பயணம் - Appar story
வாரம் உழவாரம் தேவாரம் - Part-1a - திருநாவுக்கரசர் வாழ்வும் வாக்கும் - இசைப் பயணம் - Appar story
Переглядів 1435 місяців тому
வாரம் உழவாரம் தேவாரம் - Part-1a - திருநாவுக்கரசர் வாழ்வும் வாக்கும் - இசைப் பயணம் - Appar story
7.41 - Part-2 - முதுவாய் ஓரி - mudhuvAy Ori - Thevaram class (Tamil)
Переглядів 1615 місяців тому
7.41 - Part-2 - முதுவாய் ஓரி - mudhuvAy Ori - Thevaram class (Tamil)
7.41 - Part-1 - முதுவாய் ஓரி - mudhuvAy Ori - Thevaram class (தமிழ்)
Переглядів 1665 місяців тому
7.41 - Part-1 - முதுவாய் ஓரி - mudhuvAy Ori - Thevaram class (தமிழ்)
3.10 - Part-2 - அலைவளர் தண்மதி - alaivaLar thaNmadhi - Thevaram class (Tamil)
Переглядів 1105 місяців тому
3.10 - Part-2 - அலைவளர் தண்மதி - alaivaLar thaNmadhi - Thevaram class (Tamil)
3.10 - Part-1 - அலைவளர் தண்மதி - alaivaLar thaNmadhi - Thevaram class (தமிழ்)
Переглядів 1406 місяців тому
3.10 - Part-1 - அலைவளர் தண்மதி - alaivaLar thaNmadhi - Thevaram class (தமிழ்)
thiruppugazh - punamadandhaikku - திருப்புகழ் - புனமடந்தைக்கு - (Kanchipuram) - class
Переглядів 2996 місяців тому
thiruppugazh - punamadandhaikku - திருப்புகழ் - புனமடந்தைக்கு - (Kanchipuram) - class
6.31 - Part-2 - இடர் கெடுமாறு - idar kedumARu - Thevaram class (தமிழ்)
Переглядів 3037 місяців тому
6.31 - Part-2 - இடர் கெடுமாறு - idar kedumARu - Thevaram class (தமிழ்)

КОМЕНТАРІ

  • @sampathv2794
    @sampathv2794 3 дні тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 дні тому

    இறைவன் பால், என்ன ஒரு உரிமை, சுந்தரருக்கு?!. மிக அருமை.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 дні тому

    "ஆற்றில் போட்டு குளத்தில் தேடுவது" என்பது இதிலிருந்து வந்திருக்கும் போலிருக்கிறது. மிகவும் நகைச்சுவையாக ரசித்துக் கேட்க முடிகிறது.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 4 дні тому

    சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.

  • @arunascraftworld9100
    @arunascraftworld9100 4 дні тому

    அருமை சிவாயநம

  • @dhuraisamy8732
    @dhuraisamy8732 4 дні тому

    அருமையான விளக்கம்

  • @rameshchandrani6212
    @rameshchandrani6212 4 дні тому

    Wonderful recitation! Nandri 🙏

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 5 днів тому

    அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் அராநுக ரவாதையு றுதேரைக திநாடும றிவாகியுள மால்கொண் ...... டதனாலே

    • @SivaSiva
      @SivaSiva 4 дні тому

      Yes. Good cross-reference in Thiruppugazh. (அவாமருவு - சுவாமிமலை) kaumaram.com/thiru/nnt0201_u.html

  • @nagar1549
    @nagar1549 10 днів тому

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @GuruKani-cd1kd
    @GuruKani-cd1kd 10 днів тому

    மணிவாசகர் பெருமான் ஏன் திருவிடைமருதூர் ரை கூறிப்பிடுகிறார்

    • @SivaSiva
      @SivaSiva 10 днів тому

      8.16.2 - "உத்தர கோசமங்கைக் கோன் தங்கு இடைமருது பாடிக் குல-மஞ்ஞை போன்று-அங்கு அன-நடையீர் பொன்னூசல் ஆடாமோ." - இந்த அடியில் ஏன் திருவிடைமருதூரைக் குறிப்பிட்டார் என்பதற்கு நாம் காரணம் கண்டறிதல் அரிது. இப்பாடலைப் பாடியபொழுது ஈசன் அவர் மனத்தில் இத்தலத்தை நினைப்பித்துள்ளான். அஃது அவன் திருவுளம்!

    • @GuruKani-cd1kd
      @GuruKani-cd1kd 9 днів тому

      நன்றி iyya

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 12 днів тому

    குருவே சரணம் 🙏 அருமையான பதிவு 👌

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 14 днів тому

    நல்ல விளக்கம் ஐயா. பலன் கருதி நித்தம் இந்தப் பாடலை நான் சொல்லி வருகிறேன் ஐயா. மலை பொடியாகும் பட வேலெறிந்த வேலன் என்கிற கருத்து நன்றாக இருக்கிறது.

  • @vijayashris8644
    @vijayashris8644 14 днів тому

    Excellent 👌

  • @arunascraftworld9100
    @arunascraftworld9100 15 днів тому

    அருமை சிவாயநம

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 15 днів тому

    முருகா சரணம். அயிலும், மயிலும், சேவலும் துணை.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 17 днів тому

    சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம். முருகா சரணம். அயிலும், மயிலும், சேவலும் துணை.

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 17 днів тому

    Kootraayinavaaru.....

  • @arunascraftworld9100
    @arunascraftworld9100 19 днів тому

    தெளிவான விளக்கம் கிடைக்கப் பெற்றேன் சிவாய நம

  • @arunascraftworld9100
    @arunascraftworld9100 20 днів тому

    தெளிவான விளக்கம் கிடைத்தது

    • @SivaSiva
      @SivaSiva 20 днів тому

      இப்பதிகம் ஓர் அற்புதமான பதிகம். புழக்கத்தில் அரிதாக உள்ள சொற்கள் பல உள்ள பாடல்கள்.

    • @arunascraftworld9100
      @arunascraftworld9100 19 днів тому

      @@SivaSiva உண்மைதான் சார் இவ்வளவு தெரியாமல் இருந்துவிட்டேனே என்று நினைக்கும் போது வருத்தமடைகிறேன் இன்னும் இரண்டு பகுதி கேட்க வேண்டியது இருக்கு சிவாய நம

  • @arunascraftworld9100
    @arunascraftworld9100 20 днів тому

    தெளிவான வினக்கம்

  • @arunascraftworld9100
    @arunascraftworld9100 20 днів тому

    அருமை சிவாயநம

  • @arunascraftworld9100
    @arunascraftworld9100 20 днів тому

    சிவாய நம இத்தனை நாள் இந்த பாட்டின் அருமை தெரியாமல் இருந்ததை நினைத்து வருத்தமாக இருக்கிறது இன்று தான் எனக்கு சிவன்அருள் கிட்டியதுபோல் இருக்கிறது அருமை சிவாய நம

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 20 днів тому

    🙏📿சிவாய நம 📿🙏🙏❤❤❤🎉

  • @s.swaminathan
    @s.swaminathan 25 днів тому

    🙏

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 25 днів тому

    காம்பிலா மூழை” என்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன். மூழை என்றால் கரண்டி என்பதும் இன்றுதான் தெரிந்தது. பாம்பின் வாய் தேரை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதன் முழு விளக்கமும் இன்று தான் புரிந்தது. கலந்துரையாடல் வெகு அருமை. நன்றி ஐயா.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 25 днів тому

    சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.

  • @arunascraftworld9100
    @arunascraftworld9100 25 днів тому

    அருமை சிவாயநம

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 25 днів тому

    🙏🌹🍀சிவாய நம 📿🙏🍀🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @neelapurushoat690
    @neelapurushoat690 26 днів тому

    Excellent

  • @jeyalakshmi4320
    @jeyalakshmi4320 28 днів тому

    Siva thiruchitrambalam siva

  • @s.swaminathan
    @s.swaminathan Місяць тому

    எளிமையான சிறந்த உரை🙏

  • @user-qo1ee6pj6x
    @user-qo1ee6pj6x Місяць тому

    Thanks..arputhamana vilakkam

  • @arunascraftworld9100
    @arunascraftworld9100 Місяць тому

    அருமை சிவாய நம

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Місяць тому

    ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என்பது போலிருக்கிறது, முருகப் பெருமான் வேலை விடுத்து அசுரர்ளை அழிக்கும் போதே, என்னுடைய தீவினைகளும் அழிந்து போனது என்பது.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Місяць тому

    மிகவும் அருமை. முருகனையே, அருணகிரி நாதர், நீ அடியார்களின் குறைகளக் கேட்டு, அவற்றை நீக்கி அருளவில்லை என்றால், உனை யார் வணங்குவார்?!, வேதம் தான் என்ன சொல்லும்?. எனவே நல்லமுறையில் அடியார்களைக் காப்பாற்று என்று மறைமுகமாக,வேடிக்கையாக ஆணையிடுவது போல் சொல்கிறார்.அவ்வளவு உரிமை, அருணகிரிநாதருக்கு, முருகன்பால்!.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Місяць тому

    முருகா சரணம். அயிலும், மயிலும், சேவலும் துணை.

  • @puneethaa7832
    @puneethaa7832 Місяць тому

    மிகவும் எளிமையான விளக்கம் அய்யா நன்றி🙏

  • @spectrumarasu3289
    @spectrumarasu3289 Місяць тому

    I am Thirunavukkarasu from kalambur near arani year once ten days ubnanyasam at eswaran temple arrangements by Mr Govinaraj mudaliyar swamykal stay in his home only. Myself was attented ten days Continuesly in my age of 15 in the year of 1984.afterwards I came chennai in the year of. 1989 swamikal. Ubnanyasam 10 days arrangements by saravana bhavan hotel owner that ten days myself attended total ten days. My sweetest memory with swamikal is myself answer one question raised by swamikal and got book from his hand as gift. I ever forget this incident.my father is well-known to swamikal. Because of swamikal blessing my father suit names as follows to my brothers Rajamanickam, kalyanasundaram, Thirunavukkarasu and Thiruganasambandan, we all our 5 brothers well settled in chennai having good education, house, car, byke, good healthy,wealthy,prosperty,happiness,etc all because of swamikal blessing🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 we all well blessed by swamikal ever.

  • @arunascraftworld9100
    @arunascraftworld9100 Місяць тому

    அருமை சிவாயநம

  • @thirumuraiexpress6895
    @thirumuraiexpress6895 Місяць тому

    சிவ சிவ

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Місяць тому

    முருகா சரணம். அயிலும், மயிலும், சேவலும் துணை.

  • @l4rjy
    @l4rjy Місяць тому

    இந்த ஓதுவாரின் பாடல் link ஐ மட்டும் அனுப்ப முடியுமா? You tube search இல் வரும் video வில் recording clear ஆ இல்லை. நன்றி.

    • @SivaSiva
      @SivaSiva Місяць тому

      Sathgurunatha Odhuvar's audio is available for listening on "shaivam.org mobile app" on the phone. Audio of this padhigam (3.54 - பண்: கௌசிகம்) is available on that app.

    • @l4rjy
      @l4rjy Місяць тому

      @@SivaSiva Thank you so much. I can play the song from the app now!

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Місяць тому

    சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.

  • @arunascraftworld9100
    @arunascraftworld9100 Місяць тому

    சிவாய நம இறைவன் திருவருளால் உங்கள் மூலமாக நல்ல விளக்கம் கிடைத்தது சிவாநம

  • @vijayalvijaya
    @vijayalvijaya Місяць тому

    Nandri

  • @nagarajansubramanian4296
    @nagarajansubramanian4296 Місяць тому

    சுவாமிகளை மீண்டும் காண மாட்டோமா என்று மனம் ஏங்குகிறது. இறைவன் உனக்கு ஒரு வரம் தருகிறேன். என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டால், இறைவா என் சுவாமிகளை திரும்பக் கொடு என்றே நான் கேட்பேன்.

  • @VN-dl3zs
    @VN-dl3zs Місяць тому

    அய்யாவின் பொற்பாதங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @punniyamoorthypillai6951
    @punniyamoorthypillai6951 Місяць тому

    பண் எது

    • @SivaSiva
      @SivaSiva Місяць тому

      திருக்குறுந்தொகை - 5-ஆம் திருமுறைப் பாடல்களுக்குக் குறிப்பிட்ட பண் ஏதும் இல்லை. தகுந்தபடி பல்வேறு ராகங்களில் பாடலாம்.

  • @ranganpandu6786
    @ranganpandu6786 Місяць тому

    Vetri velmurugaaa Padam Saranam 🙏🙏🙏

  • @Antennababa
    @Antennababa Місяць тому

    Beautiful!